வாழ்க்கையில் இதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்?

‘ஒரு கூடை பாசம்’ என்பது KB (கே.பாலசந்தர்) சாரால் எழுதப்பட்டு, இயக்கப்பட்ட ஒரு மேடை நாடகம்.

மேடை நாடகத்தில் நடிப்பது ஒரு அற்புதமான அனுபவம். நேருக்கு நேர் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இருப்பதால் தவறு செய்ய முடியாது.

சினிமா மற்றும் தொலைக்காட்சியில், பல தடவைகள் எடுத்த பின்னர் இறுதி வடிவத்தைப் பார்வையாளர்கள் காண்கிறார்கள். ஆனால், நாடகம் அப்படியல்ல.

இந்த நாடகம் தொடங்குவதற்கு முன் KB சார் எங்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி அளித்தார்.

ஒரு வகையில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன், ஏனெனில் KB சார் கடைசி படமான ‘பொய்’யில் நான் நடித்தேன்.

அவரின் கடைசி மேடை நாடகமான ‘ஒரு கூடை பாசம்’ நாடகத்திலும் நான் நடித்தேன்.

அவரின் கடைசி தொலைக்காட்சி தொடரான ‘அமுதா ஒரு ஆச்சரியக்குறி’யிலும் நான் நடித்தேன்.

இந்த வாழ்க்கையில் இதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்?

இந்த படம் கமல்ஹாசன் KB சாரின் மேடை நாடகம் ‘ஒரு கூடை பாசம்’ கண்டு ரசிக்க வந்தபோது பிடிக்கப்பட்டது.

நன்றி: நடிகை ரேணுகா முகநூல் பதிவு

Comments (0)
Add Comment