அதிகாலையில் கொங்கர் புளியங்குளம் மலையில் பசுமை நடை, அடுத்து எங்கள் இல்லத்தில் பசுமை நடை குறித்த விரிவான உரையாடல், அதன் பின்னர் எனது நூலகம் நோக்கிச் சென்றோம்.
அங்கே என் புத்தகங்களைப் பார்த்து தங்களின் கேள்விகளுடன் மாணவர்கள் தயாரானார்கள்.
நான் எப்பொழுது தீவிர வாசிப்பை தொடங்கினேன்? நான் சமூகப் பணி செய்ய தொடங்க காரணமாக இருந்த நிகழ்வு எது? ஒரு எழுத்தாளராக மாற வேண்டும் என்று எப்பொழுது முடிவு செய்தேன்? இப்படியான கேள்விகள் பெரும் உரையாடலாக மாறியது.
பல மாணவர்கள் பொருளாதாரம், வரலாறு, Motivation என தங்களின் விருப்பமான தளங்களில் புத்தகப் பரிந்துரைகளைக் கேட்டார்கள்.
இன்றும் பலர் வாட்சப் வழியே தங்களின் கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள்.
மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்த நிமிடம் அவர்களின் கண்விழிகள் அகன்றதைப் பார்த்து ரசித்தேன்.
புத்தகங்கள் ஒரு போதும் யாரையும் பயங்கொள்ள செய்யாது. புத்தகங்கள் அனைவரையும் நேசிக்கவே செய்கின்றன.
நன்றி: பேஸ்புக் பதிவு