நூல் அறிமுகம்: பெண் பெண்ணியம் பெண்நிலை!
பெண்ணிய வரலாற்றையும் கோட்பாட்டையும் மட்டும் பேசாமல் ஒரு இலக்கியப் பிரதியில் இருந்து பெண்ணியத் தரவுகளை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதைப் பெண்ணியக் கோட்பாட்டு நோக்கில் இந்நூல் விளக்குகிறது.
ஒரு இலக்கியப் பிரதியை 9 பல்வேறு கோணங்கள் வழியாக அணுகி ஆய்வு செய்யும் போது பெண்ணியம் சார்ந்த முழுமையான தரவுகள் கிடைக்கின்றன.
அவற்றைக் கோட்பாட்டு நோக்கில் ஆய்வு செய்து பெண்ணியம் சார்ந்த துல்லியமான முடிவுகளை அடைய முடியும்.
நூலாசிரியரே இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி இரண்டு மாதிரி ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இந்நூலின் இறுதியில் இணைத்திருப்பது ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
பெண்ணிய கோட்பாடுகள் சார்ந்த பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஆனால் பெண்ணிய அணுகு முறையை விளக்கும் முதல் நூல் என்ற நிலையில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
நூல்: பெண் பெண்ணியம் பெண்நிலை!
ஆசிரியர்: டி.விஜயலட்சுமி
கிண்டில் பதிப்பகம்