நூல் அறிமுகம்: யாமம்!
கிழக்கிந்திய கம்பனி இந்தியாவில் வணிகம் செய்ய உரிமம் பெற்றது முதல் மீனவ கிராமமாக இருந்த தற்போதைய சென்னை ஆங்கிலேயர்களால் எவ்வாறெல்லாம் உருவாக்கம் செய்யப்பட்டது என்பதை சுவாரசியமாக விவரிக்கும் புத்தகம் இது.
ஆங்கிலேயர்களில் ஒரு சாரார் தொலைநோக்கு பார்வையுடன், அறிவுக்கூர்மை கொண்ட இந்தியர்களை கௌரவபடுத்தியும் உடன் வைத்துக்கொண்டும், புரட்சி செய்தவர்களை சிறைபடுத்தியும் ஒரு இலக்கை நோக்கியே அவர்களின் பயணம் இருந்தது.
தன்னுடைய சொந்த நாட்டிலும் அவர்கள் உழைக்கும் மக்களுக்கு போதுமான வசதிகளோ ஊதியமோ கொடுத்திருக்கவில்லை.
தொலைநோக்கு பார்வை கொண்டு சிந்தித்து செயல்படுபவர்களின் வாழ்க்கை மேம்படுவதும் அப்படி அல்லாதவர்களின் உழைப்பு அதிகமாக சுரண்டப்படுவதும் வாசிக்கையில் புரிகிறது. அது ஆங்கிலேயர்களாக இருந்தாலும் சரி இந்தியர்களாக இருந்தாலும் சரி .
இந்திய நிலவியல் வரைபடத்தை உருவாக்க ஒரு சர்வே குழு பரங்கி மலையில் தொடங்கியதை இந்தியரின் வாழ்க்கையுடன் ஒரு கதை, தேயிலை தோட்டம் உருவான கதை, நாயின் பின்னால் ஊரை சுற்றி அலையும் ஒரு பண்டாரத்தின் கதை,
சூதாட்டத்தாலும் காலராவாலும் சிதைந்து போன ஒரு குடும்பத்தின் கதை என இந்த நான்கு கதைகளைக் கொண்டு மதராச பட்டிணத்தைச் சுற்றி இந்த புத்தகம் செல்கிறது.
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது.
தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட் பிளிக்ஸ் வெப்சீரியஸில் இதை திரைத்தொடராக தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.
இருளின் நறுமணத்தையும், அழகையும் எழுத்தின் மூலம் அருமையாக கடத்தியிருக்கிறார் ஆசிரியர்.
நூல்: யாமம்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
விலை: ரூ. 380/-
#யாமம் #இருள் #சென்னை #மதராசபட்டிணம் #வரலாறு #எஸ்_ராமகிருஷ்ணன் #எஸ்_ரா #yaamam_book_review #chennai #s_ra #s_ramakrishnanan #madarasa_pattinam