ஆரணியின் கட்டடக் கலை நாயகர் மோகன் ஹரிஹரன்!

அண்மையில் மறைந்த மோகன் ஹரிஹரன் ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். ஏ.சி. டெக் கல்லூரியில் கட்டடவியலில் பட்டம் பெற்றவர்.

புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர் கே.என். சீனிவாசன் கீழ் பணிபுரிந்தார். அப்போது இவர் பங்குபெற்று வடிவமைத்த கட்டடங்கள் தமிழகத்தில் பெரும்புகழ் பெற்றவை.

சென்னையின் திரையரங்குகள்:

1. தேவி தியேட்டர்
2. சத்யம் தியேட்டர்
3. ஈகா தியேட்டர்
4. காமராஜர் அரங்கம்
5. திருச்சி மாரீஸ் தியேட்டர்
6. கோவை- ராகம், தானம், பல்லவி

தொழிற்சாலைகள்:

7.பாண்ட்ஸ் இந்துஸ்தான் வீவர்
8.அர்ஜூன் டெக்னாலஜீஸ்
9. பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவனங்கள்
10.தி ப்யூபில் பள்ளிக்கூடம்

சமுதாயப் பணி:

ஏழை கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கட்டுமான தொழில் மேம்பாட்டுத் திறன் பயிற்சி அளித்தல். அன்னை சத்யா நகர் சேரியை மேம்படுத்தும் முயற்சி.

பொழுது போக்கு: உலகம் சுற்றிக் கொண்டே இருத்தல், ஓவியம் வரைதல், தோட்டப் பராமரிப்பு, சமையல்.

இறுதியாக ஆரணி மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான ஜி.குப்புசாமி முகநூல் பதிவில் ஆரணி பூசிமலைகுப்பம் பங்களா மீட்டுருவாக்கம் குறித்த பதிவு இன்னொரு முக்கியமான பங்களிப்பு.

மோகன் ஹரிஹரன் நம்மிடையே இல்லை என்று நினைக்க முடியவில்லை என்றாலும் மேற்கண்ட அவரது கட்டட வடிவமைப்பில் உள்ள ஒவ்வொன்றும் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளக்கூடிய அடையாளங்களாக உருவாக்கிச் சென்றுள்ளார்.

– ரெங்கையா முருகன்

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment