மனதை எப்படிச் செம்மையாக்குவது?

நூல் அறிமுகம்: மனம் அது செம்மையானால்!

மனம் என்பதென்ன? மனம் மூளையிலிருந்து செயல்படுகிறதா அல்லது மூளைக்கும் வேறான ஒரு சூக்குமமான பொருளா? மனம் எப்படிச் செயல்படுகிறது? நான் என்பது மனத்தில் எப்படி உருவாகிறது?

நினைவுகள், உணர்வுகள், அறிவு, மறதி, கனவு, உறக்கம் எப்படி உண்டாகின்றன? மனதின் நோய், புத்தியின் நோய்கள் என்னென்ன? மனநோயிலிருந்து மீள்வது எப்படி?

இறந்தபின் மனம் என்னவாகும்? ஆழ்மனத்தின் சக்தி? ஹிப்னோடிசம் மூலம் ஆழ்மனத்தை வசப்படுத்தலாமா? நிலத்தடி நீர் கண்டுபிடித்துத் தருவது ஆழ்மனமா?

செயற்கை மனம் சாத்தியமா? தீட்டு என்பது மன அழுக்கு ?

மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனதைக் கொண்டு எப்படி முக்தி அடைவது? உள்ளிட்ட கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான, ஆதாரமான பதில்கள் கிடைக்கின்றன இந்த நூலி. நேரமிருப்பவர்கள் அவசியம் இந்த நூலை வாசிக்கவும்.

*****

நூல் : மனம் அது செம்மையானால்!
ஆசிரியர்: பேராசிரியர் க.மணி
கிண்டில் பதிப்பகம்
பக்கங்கள்: 172

Comments (0)
Add Comment