இன்றைய கல்வித் திட்டம் சமுதாய வளர்ச்சிக்கு உதவுகிறதா?

நூல் அறிமுகம்: இது யாருடைய வகுப்பறை…?

எல்லோருடைய வாழ்விலும் மிக மிக முக்கியானது கல்வி. அழியாத செல்வமாகிய கல்வி அனைவருக்கும் அளிக்கப்படுகிறதா?

அக்காலம் முதல் இன்று வரை கல்வி பெற்ற வளர்ச்சி என்ன? வளர்ச்சியால் வளமடைந்துள்ளதா?

என்னென்ன சட்டங்கள் கல்விக்காக இயற்றப்பட்டன? கல்வி வளர்ச்சியில் உலகில் நடைபெற்ற மாற்றங்கள் என்னென்ன? இன்று நாம் கற்கும் கல்வி சரியானது தானா?

கல்வியில் பெற்றோரின் பங்கு என்ன? ஆசிரியர்களின் பங்கு என்ன? மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது?

வெளிநாடுகளில் கல்வியின் தரம் எப்படி உள்ளது? கல்வியில் அரசின் பங்கீடு என்ன? இப்படி பலவிதமான கேள்விகளுக்கு விடைகள் உள்ளது இந்த ‘இது யாருடைய வகுப்பறை?’ என்ற கல்வி சார் நூலில்.

இந்நூல் எப்படிப்பட்ட கல்வி மனித சமுதாய வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை தெளிவாக எடுத்தியம்புகிறது. ஆசிரியர் ஒருவரின் முக்கிய பணி எது என்பதை தெளிவுற காட்டுகிறது.

சிறந்த கல்விமுறையை பின்பற்றும் நாடுகளையும் அங்குள்ள மக்களின் மகிழ்ச்சியையும் இங்கே பகிர்கிறது.

மாண்டிச்சொரி, ஆல்பர்ட் ஆட்லர், ஆன்னா ஃபிராய்டு, ஆண்டன் மக்கெரென்கா, யஷ்பால் என பலரின் கல்வி கல்வி முறைகளை விளக்கி நாம் முன்னேற வழி காட்டுகிறது இந்நூல்.

நம் நாடு கல்வியில் எப்படியெல்லாம் வளர்ச்சி பெற்று வந்துள்ளது என்ற வரலாறை வடிகட்டி காட்டுகிறது. நாம் அமர்ந்து படிப்பது நம்முடைய வகுப்பறையே இல்லை என்பதை தெளிவாக்குகிறது.

நம்முடைய கல்வி முறையில் மாற்றம் வேண்டுமென அடித்து கூறுகிறது. இப்படி தேவையில்லாத அரசியல் பேசாமல் நேரிடையாகவே கல்வியின் தரத்தை எடுத்துக் கூறிய இந்நூலை கண்டிப்பாக ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் வாசித்தே ஆக வேண்டும். ஒவ்வொரு நூலகத்திலும் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய நூலிது.

***

நூல்: இது யாருடைய வகுப்பறை…?
ஆசிரியர்: ஆயிஷா இரா. நடராஜன்
பாரதி புத்தகலாயம்
பக்கங்கள்: 243
விலை: ரூ.254/-

Comments (0)
Add Comment