நூல் அறிமுகம்:
‘விதை’ நூல் ஒரு வித்தியாசமான, யாதார்த்தமான, அறிவியல் சார்ந்த கருவைக் கொண்ட ஒரு குறு நாவல்.
தமிழ்ச் சமுதாயத்தில் திருமணமாகி குழந்தை இல்லாத பெண்ணுக்கு ‘மலடி’ என்று சமூகத்தில் பட்டம் சூட்டி, பொது நிகழ்ச்சிகளில் அவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.
மலடி என்ற சமூகக் குற்றச்சாட்டில் இருந்து மீள வாடகைத் தாய் வைத்திய முறை பெரிதும் உதவும்.
மேற்கத்திய நாடுகளில் இந்த வைத்திய முறையைச் சட்டமும் அனுமதித்துள்ளது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெறுவதைச் சட்டம் அனுமதித்துள்ளது.
அதை வைத்து ஏஜென்சி மூலம் சிறுநீரகம், ஈரல், கண் போன்ற உடல் உறுப்புகளை வியாபாரம் செய்வது போல், வறுமை நிமித்தமாக வாடகைத் தாய் வியாபாரம் நடக்கிறது என்பதை விவரிக்கிறது ‘விதை’ என்ற இந்த குறு நாவல்.
*****
நூல் : விதை (குறு நாவல்)
ஆசிரியர்: பொன் குலேந்திரன் (கனடா)
கிண்டில் பதிப்பகம்
பக்கங்கள்: 46