புன்னகையே உன் விலை என்ன?

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் புகழப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர் அவர்தான்.
வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பம்மல் சம்பந்த முதலியாரின் 80-வது வயதில், அவருக்கு விழா எடுத்து சிறப்பித்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.
மேடையில் இருவரும் மனம் விட்டு மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் விழா எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அவர்களுக்குப் பின்புறத்தில் இருப்பவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவும்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
Comments (0)
Add Comment