சாலமன் பாப்பையாவின் அந்தக் காலம்!

அருமை நிழல் :

மதுரை மணம் மணக்க மேடைகளில் பேசும் பட்டிமன்ற நாயகரான சாலமன் பாப்பையாவுக்கு இளம்வயதில் பிடித்த பாடகர் பி.யு.சின்னப்பா. அவரை மாதிரியே பாடுவதில் தனி ஈடுபாடு.

லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் படித்த அவருக்கு ஓவியம் வரைவதிலும் தேர்ச்சி. படிக்கும்போதே டியூசன் சென்டரை நடத்திய பாப்பையா, துவக்க காலத்தில் நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் மேடைகளில் படு ஆவேசமாகப் பேசி வந்த பாப்பையாவுக்குப் பிடித்தமானவர்கள் திரு.வி.க.வும், பாரதியும்.

அப்படியொரு மேடையில் ஆவேசத்தின் உச்சியில் பாப்பையா இருந்தபோது ஒரு ‘க்ளிக்’.

Comments (0)
Add Comment