நூல் அறிமுகம்:
புதுமைப்பித்தன், வ.ரா., தி.ஜ.ர., டி.எஸ். சொக்கலிங்கம் உள்ளிட்ட நவீன எழுத்தாளர்கள், டி.கே.சி., கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, வெ.ப. சுப்பிரமணிய முதலியார் போன்ற பழந்தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளைப் பற்றி கு. அழகிரிசாமி எழுதிய நினைவுரைகள் இந்த நூல்.
இசைக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம், பதிப்பாளர் சக்தி வை. கோவிந்தன், மஞ்சேரி ஈஸ்வரன், தொ.மு.சி. ரகுநாதன், துறைவன், ர.பா.மு. கனி ஆகிய எழுத்தாளர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகளும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர்களின் இயல்புகள், தோற்றம், சாதனைகள் ஆகியவற்றைப் பற்றிய தன் அனுபவங்களைப் பகிரும் பாங்கில் அமைந்துள்ள நினைவுக் குறிப்புகள் இவை.
தவிர்க்க விரும்பினாலும் தன்னையும் மீறிச் சில விமர்சனங்களும் இயல்பாகப் புகுந்துவிட்டன என்கிறார் கு. அழகிரிசாமி.
அனுபவம், நினைவு, அறிமுகம் ஆகியவற்றோடு விமர்சனமும் இழையோட சுவாரஸ்யமான மொழியில் அமைந்த நூல் இது.
*****
நூல்: நான் கண்ட எழுத்தாளர்கள்
ஆசிரியர்: கு.அழகிரிசாமி
தொகுப்பாசிரியர்: பழ.அதியமான்
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 216
விலை: ரூ.275/-