அண்ணா படத்தைத் திறந்த கலைவாணர்!

அருமை நிழல் :

1957 ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி. சேலம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணாவின் படத்திறப்புவிழா. மேடையில் அமர்ந்திருக்கிறார் அண்ணா. படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

தன்னுடைய உடல் நலிவடைந்த நிலையிலும், வலியோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைவாணர் பேசினார்.

“அண்ணாவின் படத்தைத் திறந்து வைப்பது என்னுடைய பாக்கியம் என்று சொல்ல மாட்டேன். அது என்னுடைய கடமை”.

இது தான் கலைவாணர் வாழ்வின் நிறைவாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி.

(ஆதாரம்; பேராசிரியை அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய ‘சமூக விஞ்ஞானி கலைவாணர்’ நூல்)

Comments (0)
Add Comment