செய்தி:
ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக சனாதனத்தை தற்போது மறந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
கோவிந்த கமெண்ட்:
ஏற்கனவே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியதும் தேசிய அளவில் அது பரபரப்பான செய்தியாக்கப்பட்டு பல்வேறு வழக்குகள் முதற்கொண்டு போடப்பட்டன.
பிறகு, சனாதனம் பற்றிய தன்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அறிவித்துவிட்டார் உதயநிதி.
அதன்பிறகு திமுக தலைமையில் முருக பக்தர்களை ஒன்றிணைத்து மாநாடு நடத்தி இருக்கிறது இதே ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார்.
இப்படி பல மாற்றங்களுக்குப் பிறகு முதல்வர் வெளிநாட்டிலிருந்து சென்னைக்குத் திரும்பிய பிறகு, மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சனாதனம் குறித்து பேசி மறுபடியும் சர்ச்சைக்கு வழி வகுத்து இருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்த சமயத்தில் எளிமையாக ஒரு கேள்வி.
திமுக, சனாதனம் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி விரும்புகிறாரா? அல்லது தொடர்ந்து சனாதனம் பேசு பொருளாக இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரா?