டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இப்படி ஒரு ஜாமின் நிபந்தனை!

செய்தி:

மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

கோவிந்த் கமெண்ட்:

பல மாதங்களுக்குப் பிறகு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஒரு வழியாக ஜாமீன் கொடுத்து இருக்கிறது.

அதேசமயம் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கும்போது சில நிபந்தனைகளையும் சேர்த்து விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகள்தான் விசித்திரமாக இருக்கின்றன.

டெல்லி முதலமைச்சரான அவர் தன்னுடைய அலுவலகத்திற்குச் செல்லக்கூடாது, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கோப்புகளிலும் அவர் கையெழுத்திடக் கூடாது என்று சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

அப்படி என்றால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் வீட்டில் அமர்ந்தபடி என்னதான் செய்வார்? எப்படிதான் செயல்படுவார்?

Comments (0)
Add Comment