என்னைக் கவர்ந்த புத்தகம் ‘பெரியார் களஞ்சியம்’தான்!

கவிஞர் நா.முத்துகுமார்

எனது தந்தையாருக்கும், எனக்கும் உள்ள பொதுவான குணாம்சமே, புத்தகங்கள் வாங்கிக் குவிப்பது தான்.

“புத்தகம் வாங்கியே நீ பாதி ஏழையாகி விட்டாய்” என்று என் நண்பர்கள் செல்லமாகக் கடிந்து கொள்வதுண்டு. ஆனாலும், அந்தப் பழக்கத்தை என்னால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.

கிட்டத்தட்ட அறுபதாயிரம் புத்தகங்கள் எனது வீட்டில் இருக்கின்றன. ஆனாலும் அவற்றில் என்னைக் கவர்ந்த புத்தகம் பெரியார் களஞ்சியம்தான்.

எப்போது எடுத்துப் படித்தாலும் சலிப்பைத் தராத புதிய, புதிய வாழ்வியல் சிந்தனைகளை தோற்றுவிக்கும் வலிமை வாய்ந்தது அந்த புத்தகம்.

Comments (0)
Add Comment