பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல!

செய்தி:   

கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சிமி ரோஸ் பெல் ஜான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குதான் முக்கியப் பதவி வழங்கப்படுகிறது. திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

கேரளத் திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் போன்ற நிலை தான் காங்கிரஸ் கட்சியிலும் நிலவுகிறது. கண்ணியமான பெண்கள் இந்தக் கட்சியில் பணியாற்ற முடியாது” என தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் கடுகண்டனம் தெரிவித்ததுடன் செமி ரோஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநிலத் தலைவருக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கோவிந்த் கேள்வி:     

இப்போதுதான் பல மொழிகள் சார்ந்த திரையுலகில் பெண்கள் பாடாய்படும் செய்திகள் வெளிவந்து மீடியாக்களுக்கு தீனியாகிக் கொண்டிருக்கின்றன.

இப்போது தேசியக் கட்சியிலும் இப்படிப்பட்ட புகார்கள் எழுந்து, அந்தப் புகாரை கூறியவர் பொறுப்பாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இனி ஒவ்வொருக் கட்சியிலும் மகளிர் அணி இருப்பது மாதிரி, மகளிருக்கான பாதுகாப்புக் கமிட்டியும் இருந்தாக வேண்டும் போலிருக்கிறதே!

Comments (0)
Add Comment