குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக வீடுகளை இடிப்பதா?

- மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

செய்தி:   

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதைச் சுட்டிக்காட்டி, ஜாமியத் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து, “வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கக் கூடாது” என்று உத்தரப்பிரதேச அரசு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவரது வீட்டை எப்படி எடுக்கலாம்?” என கேள்வி எழுப்பினர்.

மேலும் “அவர் குற்றம் செய்தவர் என நிரூபிக்கப்பட்டால்கூட சட்டம் நிர்ணயித்த வழிமுறையைப் பின்பற்றாமல் இடிக்க முடியாது” என்றும் கூறினர். 

கோவிந்த் கேள்வி:       

நம்மூரில் பிடிபடும் சில குற்றவாளிகள் வழுக்கி விழுந்து கை, கால் கட்டுடன் காட்சியளிப்பதைப் போல, வடக்கே குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது நடக்கும் போலிருக்கிறது.

உச்சநீதிமன்றம் சரியாகத்தான் நச்சென்று இந்த கேள்வியை கேட்டிருக்கிறது, இல்லையா?

Comments (0)
Add Comment