பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மாதவன் மறுப்பு!

செய்தி:   

இந்தி நடிகர், நடிகைகள் சினிமாவைத் தாண்டி விளம்பரப் படங்களில் நடித்தும் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.

சிலர் பான் மசாலா விளம்பரங்களிலும் நடிக்கிறார்கள். சாருக்கான், அக்ஷய்குமார், அஜய் தேவ்கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் பான் மசாலா விளம்பரங்களில் நடித்தனர். இதற்காக பல கோடிகளை சம்பளமாகப் பெற்றனர். இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்தி நடிகர் ஜான் அபிரகாமும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களைக் கண்டித்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் மாதவனை பெரிய பான் மசாலா நிறுவனமொன்று அணுகி விற்பனையை அதிகரிக்க தங்கள் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

இதற்காக பல கோடி ரூபாய் தருவதாகவும் பேசியது. ஆனால், மாதவன் அதில் நடிக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

கோவிந்த் கேள்வி:   

பரவாயில்லையே, இந்த அளவுக்காவது தன்னுடைய நடிப்பை மதித்து வாழ வைத்த மக்கள் மீது அக்கறை இருக்கிறதே…!

Comments (0)
Add Comment