மகாராஷ்டிராவின் பால்கரின் வத்வான் ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று (டிசம்பர் – 4ம் தேதி அன்று) திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி வெண்கலச் சிலை திங்களன்று (ஆகஸ்ட்-26) மதியம் 1 மணியளவில் இடிந்து விழுந்தது.
இதனிட்டையே பாஜக கூட்டணி ஆட்சியின் ஊழல் காரணமாகவே சிவாஜி சிலை உடைந்தததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், “சிவாஜி மகாராஜ் ஓர் அரசர் மட்டுமல்ல, அவர் மரியாதைக்குரியவர். சத்ரபதி சிவாஜியை கடவுளாக வணங்கும் அனைவரின் உணர்வுகளையும் புண்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய ‘பண்பு’ முற்றிலும் வேறுபட்டது. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் வணக்கத்துக்குரிய தெய்வத்தைவிட எதுவும் பெரியது அல்ல” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.