மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் ஏற்படும். மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு.
நல்ல விஷயங்களைப் பற்றி பேசும்போது பல்லி கத்தினால் நல்ல சகுனம் என பெரியோர்கள் கூறுவார்கள். பல்லி நம் உடலின் மீது விழும் இடத்திற்கேற்ப தோஷங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.
வீட்டில் ஒன்றிரண்டு பல்லிகள் இருப்பது பிரச்னையில்லை. ஆனால் அதிக அளவில் பல்லிகள் தொந்தரவு இருக்கும்.
எனவே, வீட்டில் அவ்வப்போது ஒட்டடை அடித்து சுத்தம் செய்து வாருங்கள். இயன்றால் புதிதாக சுண்ணாம்பு அல்லது பெயிண்ட் அடிப்பதும் நல்லது.
நேர்மறையான எண்ணங்களைத் தரும் கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் போன்றவற்றை காலை மாலை இருவேளையும் வீட்டில் ஒலிக்கச்செய்யுங்கள்.
தினசரி பூஜை செய்யும்போது எழும் மணியோசையும் பல்லிகளின் தொல்லையை கட்டுப்படுத்தும் மற்றும் விஞ்ஞான ரீதியாக கற்றாழையை வைப்பதன் மூலமாகவும் பல்லிகளின் தொல்லையை கட்டுப்படுத்லாம்.
மகேஸ்வரி, கல்லூரி மாணவி