நாவல், சிறுகதை, கட்டுரை என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த ஜெயகாந்தன், எழுதுவதைச் சில காலம் நிறுத்தியபோது, அது குறித்து அவருடைய நண்பர் கேட்டபோது, பல பத்திரிகைகள் ரஸக்குறைவான பாதையில் மிக வேகமாய்ச் சறுக்கிக் கொண்டிருப்பதைப் பற்றி ஆதங்கப்பட்ட ஜெயகாந்தன் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
“இந்தப் போக்கு குறித்து எனது கண்டனத்தை நான் வேறெப்படி ரிஜிஸ்டர் செய்வது?
ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் இடத்தில் சூழ்நிலைகள், உறவுகள் பழுதுப்பட்டுப் போனால், வேலை நிறுத்தம் செய்கிறான் அல்லவா?
அது போலவே எழுத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளவன் என்கிற முறையில், நான் தற்போதைக்கு வேலை நிறுத்தம் செய்திருக்கிறேன்”.