லண்டன் முழுக்கப் பல நூற்றாண்டு பழமையான வீடுகள். அதைவிடப் பழமையான கருத்துக்களுடன் வாழும் மனிதர்கள் திரும்பும் திசை எல்லாம் மியூசியங்கள்.
மியூசியங்கள் அமைப்பது எப்படி என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.
பழம்பெருமையில் தமிழர்களையும் மிஞ்சும் போக்கு. அரசனும், அரசியும், அவர்களின் காதல், காமக் கதைகளும் இங்குள்ளவர்களுக்குத் தீராத பேசு பொருள்.
அரசியும், சர்ச்சும் கை கோர்த்து, ஒன்றை ஒன்று தாங்கியபடி, மக்கள் அரசியல் விழிப்படையாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.
எங்கும் கொண்டாட்டங்கள். இசை, நாடக மழை. ஓடும் ரயிலில் வாசிப்பதெல்லாம் புதினங்கள். பல்வேறு இனக் கலவையில் அலையும் பெருங்கூட்டம் கோடை விடுமுறையைக் கொண்டாடுகிறது.
ஷேக்ஸ்பியர் காலம்தொட்டு நாடகக் கலை வாழ்வின் முக்கிய அங்கம் வகிக்கின்றது. இசையும் தான்.
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை இந்தக் குட்டித் தீவினர் எப்படி ஆண்டார்கள் என்பது ஆச்சரியம் ஊட்டுகிறது.
தேம்ஸ் நதி மட்டும் எந்தச் சலனமுமின்றி எல்லாவற்றையும் பார்த்தபடிக் கடந்து அமைதியாகப் பாய்கிறது.
– உஸ்மான் அலி