‘மாற்றம் ஒன்றே மாறாதது’!

நூல் அறிமுகம்:

இவ்வுலகில் எப்போதும் மாறாத ஒன்று மாற்றம் மட்டுமே. இத்தகைய மாற்றங்களை, நிகழ்வுகளை, சூழ்நிலைகளை, கதாபாத்திரங்களை நிகழ்கால வாழ்க்கையோடு ஒப்பிட்டு சுயசரிதையாக எழுதியுள்ள மோ-யானின் குறு நாவலே ‘மாற்றம்’.

சீனாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நடந்த மாற்றங்களை, பள்ளிக்கால நண்பர்களின் வாழ்வில் நடந்த மாற்றங்களைப் பதிவு செய்வதன் வழியாகச் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் மோ-யான்.

ஆரம்ப கால பள்ளிப் பருவம் தொடங்கி தனது பணி ஓய்வு வரை தன் வாழ்வில் நடைபெற்ற மாற்றங்களை ‘மோ-யான்’ விவரிக்கும்போது அந்நிகழ்விற்கே நேரிடையாக சென்று வந்தது போன்று பிரமை ஏற்படுகிறது. இதுவே மொழிபெயர்ப்பு நூலுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி.

சுயசரிதையாக எழுதும்போது பெரும்பாலானோர் தங்களின் முன்னேற்றங்களை, வெற்றிகளை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்வர். ஆனால், அதற்கு சற்றும் மாறாகமோ-யான்’ தனது அவமானங்கள், பயம், கவனமின்மை போன்ற தனது எதிர்மறை எண்ணங்களை விவரித்துள்ளார்.

படிப்பு, திருமணம், வேலை என அவருக்கு கிடைத்த எவற்றின் மீதும் பற்றற்று எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு இவர் எழுதிய ‘சிவப்பு சோளம்’ புத்தகத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது கூடுதல் சிறப்பு.

சீன‌ மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இப்புத்தகத்தை சீக்கிரம் விளங்கி கொள்வது படிப்பவரின் சாமர்த்தியம்.

ஆட்சி மாற்றங்களையோ, தலைவர்களின் பட்டியலையோ சாராமல் ஒரு சமூகத்தில் தனக்கு நெருங்கிய மனிதர்களின் வாழ்வை உற்றுப் பார்ப்பதன் மூலம் ஒரு நாட்டின் வரலாற்று மாற்றங்களைப் பதிவுசெய்ய முடியும் என்று வெற்றிகரமாக நிறுவுகிறது இந்த  ‘மாற்றம்’ நூல்.

‘மாற்றம் ஒன்றே மாறாதது’!!

*****

புத்தகம்: மாற்றம்
ஆசிரியர்: மோ-யான்
தமிழில் : பயணி
காலச்சுவடு பதிப்பகம்

பக்கங்கள் : 110

– நன்றி தரணி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment