நூல் அறிமுகம்:
‘கல்விக்கூடம் தொழில்நுட்பச் சமுதாயத்தின் உலகளாவிய ஒரு மதமாக ஆகிவிட்டது. அதனுடைய சித்தாந்தத்தை உள்ளடக்கி அதனைப் பரப்பி, இந்த சித்தாத்தங்களை ஏற்றுக் கொள்ளுமாறு மனிதரின் மனங்களை உருவாக்கி அதனை ஏற்றுக் கொள்வதற்கு ஏற்ப சமூக அந்தஸ்தை தருகிறது.
மனிதன் தொழில்நுட்பத்தை நிராகரிக்க முடியாது. ஆனால் இப்போதுள்ள கேள்வியானது அதனை எப்படி ஏற்றவாறு மாற்றிக் கொள்வது, எப்படி ஒருதிசையில் செலுத்துவது, எப்படி கட்டுப்படுத்துவது என்பதுதான்.
காலம் அதிகமில்லை. ஒரே நம்பிக்கை கல்வியில்தான் இருக்கிறது. தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல், அதன் பெயரால் அடிமைப்படுத்தும் பிறருக்கு அடிமையாகாமல் இருக்கும் ஆற்றலுடைய சுதந்திர மனிதருக்கான உண்மை கல்வியில்தான் அந்த நம்பிக்கை இருக்கிறது.’
******
நூல்: கல்விக்கூடம் இறந்து விட்டது
ஆசிரியர்: எவ்ரெட் ரெய்மர்
தமிழில்: ச.வின்சென்ட்
பக்கங்கள்: 176
விலை: 238/-