குணா பாடலுக்கான விலை?

வுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. சிதம்பரம் இயக்கிய இந்தப் படம், கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானது. மலையாளத்தில் வெளியான இந்தப் படம் தமிழ், தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டாகி உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலித்தது.

இந்தப் படத்தில், கமல்ஹாசன் நடித்து 1991-ல் வெளியான ‘குணா’ படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

இந்தப்பாடலை தனது அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும் அதற்கு இழப்பீடாக ரூ.2 கோடி வேண்டும் என்றும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், தயாரிப்பு நிறுவனம் இசை நிறுவனத்திடம் அனுமதி பெற்றே பயன்படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தது. இதை இளையராஜா ஏற்கவில்லை.

இதையடுத்து ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத் தயாரிப்பு தரப்பும் இளையராஜா தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவில் படக்குழுவினர் இழப்பீடாக இளையராஜாவுக்கு ரூ.60லட்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

#ilaiyaraaja #60_lakhs_compensation #manjummel_boys #இளையராஜா #மஞ்சும்மள்_பாய்ஸ் #கொடைக்கானல் #குணா #கமல்ஹாசன்  #கண்மணி_அன்போடு_காதலன்_பாடல்

Comments (0)
Add Comment