மத்தியமைச்சர் சுரேஷ் கோபிக்கு ஒரு கேள்வி!

கேரள மாநிலத்தையே அதிர வைக்கும்படியான வயநாடு துயரச் சம்பவம் நடந்து, அதற்கான மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, அங்குள்ள மக்கள் பலர் எதிர்பார்த்தது மத்திய அமைச்சரான சுரேஷ்கோபியின் வருகையை.

ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பினராயி விஜயன் போன்றோர் வந்து பார்வையிட்டு நேரடியாக ஆறுதல் சொல்லிவிட்டு போனபிறகும், திருச்சூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றப் பிரதிநிதியாக பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுற்றுலாத் துறைச் சார்ந்த மத்திய அமைச்சராக இருக்கின்ற சுரேஷ் கோபி ஏன் உரிய அளவு கவனத்தையும், மாநிலம் சார்ந்த ஒரு அக்கறையும் வெளிப்படுத்துகிற விதத்தில் வயநாட்டுக்கு இதுவரை நேரடியாக வந்து பார்வையிடவில்லை.

பாஜகவின் அணுகுமுறையைத் தான் இந்த விஷயத்தில் அவர் பிரதிபலிக்கிறாரா? தன்னை தேர்ந்தெடுத்து மக்களவைக்கு பிரதிநிதியாக அனுப்பிய மக்களுக்கு, அவர் இந்த விதத்திலா எதிர்வினை ஆற்ற வேண்டும்.

கல்வியறிவு மிக்க மக்கள் அதிகம் இருக்கிற கேரளத்தில், சுரேஷ் கோபி போன்றவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்வினையும் கூர்மையாய் கவனிக்கப்படும் என்பதை மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்தில் கொள்ளுங்கள்.

Comments (0)
Add Comment