பட்டியலின மேம்பாட்டுக்காக தனித்தனி அமைச்சகங்கள்!

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் சம்மரிக்ஷா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதியை கொடுக்காமல் மிரட்டுகிறார்கள். இது கண்டனத்துக்குரியது.

உர மானியம், உணவு மானியம் போன்றவற்றில் மத்திய அரசு கைவைத்துள்ளதால் விவசாயிகள் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

கல்வித்துறைக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை.

உயர்கல்விக்கு இந்த முறை ரூ.10000 கோடி அளவிற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஐஐடி நிறுவனத்திற்கு ரூ.60 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

பிரிவு 368ன் கீழ், இயற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் 3 குற்றவியல் சட்டங்கள் இந்தியில் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன்?

இந்த மாற்றத்தை ஏன் கொண்டு வந்தீர்கள்? இந்த 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.

நாடு முழுவதும் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கென்று தனி சட்டத்தை உருவாக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி.க்கு என தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்காகவும் தனி அமைச்சகங்களை உருவாக்க வேண்டும்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

Comments (0)
Add Comment