கேரளாவை அதிர வைத்த நிலச்சரிவு!

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையையொட்டி, கேரளாவின் வயநாடு அருகில் உள்ள முண்டக்கை, மெப்பாடி, சூரல்மலா ஆகிய 3 மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அடுத்தடுத்து கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளும், வாகனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தகவலறிந்த தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் அரக்கோணத்திலிருந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 42 பேர் இதுவரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேரள மாநில அரசின் நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டு, அங்கு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.

கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான சுரேஷ்கோபி, இந்த நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடியிடம் நேரடியாக தெரிவித்திருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் தொடர்ந்து மழை கனமழை பெய்து வருவதால், தற்போது அதற்கிடையே தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Comments (0)
Add Comment