கள் விற்பனை: தடை நீக்கப்படுமா?

செய்தி:

தமிழகத்தில் கள் விற்பனைக்கான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கோவிந்த் கேள்வி:

ஏற்கனவே விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குப் பிறகு தமிழகத்தில் கள்ளுக் கடைகளைத் திறப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

அதாவது டாஸ்மாக் போதையை விட இயற்கையாகக் கிடைக்கும் கள்ளின் மூலம் உருவாகும் போதை மேலானது என்கின்ற கணிப்பையெல்லாம் பலர் அப்போது முன் வைத்தார்கள்.

தமிழகத்தில் கள் இறக்குவதை அனுமதிக்க வேண்டும் என்று சில இயக்கங்கள் குரல் கொடுத்தன. அதைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் கள் விற்பனைக்கான தடையை நீக்குவதுப் பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் வைத்திருக்கிற கோரிக்கை ஒரு விதத்தில் சரியானதுதான். ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானத்தை அரசும் நம்புகிறது.

மதுபானத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளை நடத்தும் உரிமையாளர்களும் டாஸ்மாக் வருமானத்தையும் விற்பனையையும் பெருமளவில் நம்புகிறார்கள்.

அவர்கள் கள்ளுக் கடை விற்பனையை ஆதரிக்க முன்வருவார்களா? அல்லது கள் விற்பனைக்கான தடை நீக்கப்படுவதை விரும்பி ஏற்பார்களா? இப்படி பல கேள்விகள் இயல்பாக எழுதுகின்றன.

கள்ளச்சாராய விற்பனை அங்கங்கே நடப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான், கள் விற்பனைக்கான தடையை நீக்குவது பற்றியான ஒரு எதிர்க்குரலும் எழுந்திருக்கிறது.

கள் உண்ணாமை பற்றி திருவள்ளுவர் வலியுறுத்திய அதே தமிழ் நிலத்தில் தற்போது கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையில் நாம் இருக்கிறோமா? இதுதான்  எதார்த்தமா?

Comments (0)
Add Comment