சிறைக்குள் கஞ்சாவும் செல்போன்களும் பிடிபடுவது எப்படி?

செய்தி:

சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளிடமிருந்து செல்போன்களும் கஞ்சாப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

கோவிந்த் கேள்வி:

சிறை வளாகத்தில் எத்தனையோ டவர்கள் இருக்கின்றன. ஜாமர் கருவிகள் கூட இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும், இதையும் மீறி கைதிகளுக்கு செல்போன்கள் எப்படியோ கிடைத்து விடுகின்றன. கிடைத்து அவர்களும் தொடர்பு எல்லைக்குள் தான் இருக்கிறார்கள்.

அதே சமயம் வெளிப்புழக்கத்தில் இருக்கிற கஞ்சாவைப் பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், சிறைக்குள் எப்படி கஞ்சா கடத்தப்படுகிறது; கடத்தப்பட்டு அங்குள்ள கைதிகள், அந்த போதைப் பொருள்களை எப்படிப்பட்ட சுதந்திர உணர்வுடன் உள்ளே அனுபவிக்கிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் புதிராகத்தான் இருக்கிறது இல்லையா?

Comments (0)
Add Comment