செல்வப் பெருந்தகையின் கொள்கை முரண்!

செய்தி:

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனையில் அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று குரல் கொடுத்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை.

கோவிந்த் கேள்வி:

பரந்தூரில் விமான நிலையம் உருவாவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறீர்கள். வரவேற்க வேண்டிய விஷயம் தான்.

ஆனால், அதே சமயம் பரந்தூர் விமான நிலையத்தை உருவாக்க நினைப்பவர்களின் கூட்டணிலும் காங்கிரஸ் இருக்கிறது என்பதையும் உணர்ந்திருக்கிறீர்கள் இல்லையா?

Comments (0)
Add Comment