பெரியாருக்கென பிரத்யேகமாக உருவான ஓடிடி தளம்!

திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் “PERIYAR VISION-Everything for everyone” சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னையில் திராவிடர் கழகத் தலைமையகமான பெரியார் திடலில் தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் “PERIYAR VISION-Everything for everyone என்கிற OTT தளம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த OTT தளத்தை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

இன்றைய காலத்தின் தேவையான OTT தளமாக இந்த தளம் தொடங்கப்பட்டுள்ளது. கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் “PERIYAR VISION – (Everything for everyone)” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விழாவின்போது, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் திரு. கி.வீரமணி, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் திரு. கலி.பூங்குன்றன், திரைப்பட நடிகர் திரு. சத்யராஜ், திராவிடர் கழகத்தின் பொருளாளர் திரு. வீ.குமரேசன், பொதுச்செயலாளர் திரு. வீ.அன்புராஜ், துணை பொதுச்செயலாளர் திரு. பிரின்சு என்னாரெசு பெரியார், திரு. இரா.மதிசீலன், திரைப்பட இயக்குநர் திரு. ஞான ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

#periyar_vision_ott #periyar_ott #social_justice #asiriyar_kiveeramani #Kanimozhi_Karunanidhi #Sathyaraj #கி.வீரமணி #பெரியார்_விஷன்_ஓடிடி
#நாடாளுமன்ற_உறுப்பினர்_கவிஞர்_கனிமொழி
#இனமுரசு #சத்யராஜ் #PERIYAR_VISION

periyar vision ottபெரியார் விஷன் ஓடிடி
Comments (0)
Add Comment