திரைத் தெறிப்புகள்-10:
தாய்மையைப் போற்றும் விதமாக தமிழ்த் திரையுலகில் எத்தனையோ பாடல்கள் வெளிவந்து இருக்கின்றன.
ஆனால் 1958-ம் ஆண்டில் வெளிவந்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற படத்தில் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரியின் இனிமையான குரலில் இப்படிப்பட்ட பாடல் வரிகளை எழுதி இருப்பவர் கே. முத்துசுவாமி என்ற புதுக் கவிஞர்.
மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா?
பெற்றெடுத்த குழந்தை
தாய்க்கு பாரமா?
என்கின்ற வரிகளைக் கேட்கும்போது குழந்தையை செல்லமாய் தாலாட்டுவதைப் போல் இருக்கும்.
அதே பாடலில் “பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா? பேணி வளர்க்க வேணும் தெரியுமா?” என்கின்ற எளிமையான வரிகள் தாய்மை உள்ளம் கொண்ட எவரையுமே நேசிக்க வைக்கும்.
எப்போதும் தாய்மை மற்றும் குழந்தைமைக்கானக் குரல் அழகாகத்தான் இருக்கிறது.
#தை_பிறந்தால்_வழி_பிறக்கும் #Thai_piranthal_vazhi_pirakkum #எஸ்எஸ்_ராஜேந்திரன் #SS_Rajendiran #கேவி_மகாதேவன் #KV_Mahadevan #எம்எஸ்_ராஜேஸ்வரி #MS_Rajeswari #கே_முத்துசுவாமி #K_Muthuswami #மண்ணுக்கு_மரம்_பாரமா #Mannuku_Maram_Barama #song_lyrics