“ஆணி புடுங்குவது, ஆணியேப் புடுங்க வேண்டாம்” என்னும் தொடர்கள் வடிவேலிடமிருந்து புகழ்பெற்றதாகத்தானே நினைத்துகொண்டிருக்கிறோம்?
அதற்கும் முன்பாகவே ஒருவர் ஆணி பிடுங்கியிருக்கிறார். அவர்தான் உவமைக் கவிஞர் சுரதா. அவர் ஆணி பிடுங்கிய கதை அப்போதைய இலக்கியப் பரப்பில் நகைச்சுவையாய் உலவிக் கொண்டிருந்தது.
நேர்காணல் ஒன்றில் அவர் கூறியது.
“நீங்கள் ஏன் சுரதா என்று பெயர் வைத்துக் கொண்டீர்கள்?” என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு “பாரதிதாசனிடத்திலே எனக்கு ஈடுபாடு உண்டு. அதனாலே சுப்புரத்தினதாசன்னு வச்சிக்கிட்டேன்.
ஒரு சமயம் லெட்டர் எழுதறப்போ கையெழுத்து போட இடமில்லே. சு.ர.தா. என்று சுருக்கமாக இடையிலே புள்ளி வைத்து எழுதினேன். பிறகு யோசித்துவிட்டு, இடையிலே இந்த ஆணிகள் எதுக்காகன்னுட்டுப் புடுங்கிட்டேன்.” என்று கூறியுள்ளார்.
இதுதான் சுரதா ஆணி பிடுங்கிய கதை.
– நன்றி: மகுடேஸ்வரன் கோவிந்தராஜன்