மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய தந்தை பெரியார் அவர்கள் 13-11-1932 ‘குடி அரசு’ இதழில் ‘ஈ.வெ.ரா. குறிப்பு’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், “இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும் பெயருக்கு முன்னால் மரியாதை வார்த்தை பின்னால் சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக ‘தோழர்’ என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும் மகாளஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜித் என்பது போன்ற வார்த்தைகனை சேர்த்துப் பேசவோ எழுதவோக் கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன்.
‘குடி அரசி’லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
- நன்றி: ‘குடி அரசு’ இதழ்