மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா!

திரைத் தெறிப்புகள்-5

*****

“மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா – தம்பி
மனதில் வையடா;
வளர்ந்து வரும் உலகத்துக்கே – நீ
வலது கையடா – நீ
வலது கையடா”.

1961-ம் ஆண்டு வெளிவந்த ‘அரசிளங்குமரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் இவை. “சின்னப்பயலே சின்னப்பயலே,  சேதி கேளடா” என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இந்தப் பாடலுக்கு வாய் அசைத்து நடித்திருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

பொதுவுடைமைக் கருத்துகளை மிக எளிமையாக, எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் அமைக்கப்பட்டன இந்தப் பாடல் வரிகள். இதே பாடலில் இன்னொரு இடத்தில் இப்படி சொல்லியிருப்பார் மக்கள் கவிஞர்,

“தனி உடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
 நீ தொண்டு செய்யடா
 தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா..”.

என்கின்ற மிகவும் தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளும் இதே பாடலில் இடம்பெற்றிருக்கும்.

ஒட்டுமொத்த பாடலுமே ஒரு பொதுவுடைமைக் கருத்துகளை பொது வெளியில் விதைக்கிற விதத்தில் மிகவும் அருமையாக அமைந்திருக்கும்.

தான் சார்ந்திருந்த பொதுவுடைமைக் கட்சிக்கான பார்வையை தான் எழுதிய ஒவ்வொரு பாடலிலுமே  வெளிப்படுத்தி இருக்கிற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் அந்த வரிகள், மக்கள் திலகத்தின் வாயசைப்பிலும் டிஎம்எஸ்ஸின் உச்சரிப்பிலும் வலிமைப் பெற்று தற்போதும் எழுச்சியோடு ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

#மக்கள்_திலகம்_எம்.ஜி.ஆர். #Makkal_Thilagam_MGR #அரசிளங்குமரி #Arasilankumari #மக்கள்_கவிஞர்_பட்டுக்கோட்டை_கல்யாண_சுந்தரம் #Makkal_Kavingar_Pattukottai_Kalyana_Sundaram #சின்னப்பயலே_சின்னப்பயலே_சேதி_கேளடா #Chinna_payale_Chinna_payale_Sethi_Kelada #டிஎம்_சௌந்தரராஜன் #TM_Soundararajan

Comments (0)
Add Comment