துரத்தும் ’குடி’ மரணங்கள்!

துயரத்திலும் பெருந்துயரானது கள்ளச்சாராய மரணங்கள். உழைத்துக் களைத்து உடல் வலி தீரக் குடிக்கும் நோக்கில் தங்கள் வருமானத்துக்கேற்ற ஒரு மதுவை விலை மலிவாக வாங்கி மெத்தனால் எமனுக்கு பலியாகின்றவர்கள்.

அரசே மதுவினை விற்றாலும் அதனினும் மலிவாக வேண்டிப் போகின்றவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் அல்லாமல் வேறென்ன?

தங்கள் வருமானத்தை மட்டுமே பெரிதாக எண்ணி மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் அத்தனை பேரும் வன்மையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

70-களில் பிறந்தவர்களில் தொடங்கி ஈராயிரக் குழவிகள் வரை குடியின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல சாராயமோ கள்ளச் சாராயமோ எப்பாடுபட்டேனும் குடியும் போதையும் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இவையன்றிப் பெரும் அச்சுறுத்தல் இயற்கைப் பேரிடர்கள். இத்தகைய சிக்கல் எழுந்திருப்பதற்கும் நாம்தான் காரணமேயன்றி வேறொருவர் அல்ல என்ற சிந்தனையும் நமக்கு எழ வேண்டும்.

இயற்கையைச் சீரழித்ததன் பலனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். மேலும் சீரழியாமல் பாதுகாக்கும் வழியை ஆலோசிக்க வேண்டும்.

– எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி

நன்றி: இந்து தமிழ் திசை.

liquor-deathsகள்ளச் சாராயம்கள்ளச்சாராய மரணங்கள்
Comments (0)
Add Comment