எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்…!

திரைத் தெறிப்புகள் – 2

******

ஞான ராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’, பாலசந்தர் இயக்கிய ‘வறுமையின் நிறம் சிவப்பு’ உள்ளிட்ட சில படங்களில் இடம் பெற்றிருக்கிற பாடல் – பாரதியின் “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ” பாடல்.

இதில் வரும் வரி தான் “எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

சிவசக்தியிடம் மனம் வருந்திப் பாடும் இப்பாடலில் பல சத்தான வரிகள் இருக்கின்றன. இருந்தாலும் இந்தப் பாடலில் பாரதி பயன்படுத்தியிருக்கும் சொல்லாடல் வியப்பு.

“சுடர்மிகும் அறிவு” – என்கிற சொல்லை நமக்கு இருக்கும் அதீத சென்ஸிட்டிவிட்டி – என்கிற அர்த்தத்தோடு பாரதி பயன்படுத்தி இருக்கலாம்.

அதையே “சுடர்மிகும் அறிவு” என்றிருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தச் சுடர் மிகும் அறிவு தான் பாரதியை எழுச்சியான படைப்பாளியாக ஆக்கியிருக்கிறது. சமூக உணர்வுள்ளவனாக ஆக்கியிருக்கிறது.

இது பாரதிக்கு மட்டுமல்ல, சென்சிட்டிவ்வாகத் தன்னை உணர்கிறவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.

Comments (0)
Add Comment