எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே பிரதமர் மோடி உரை!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 27-ம் தேதி உரையாற்றினார்.

இதையொட்டி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திமுக எம்.பி. ஆ.ராசா எனப் பலரும் உரையாற்றினார்.

இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (02.07.2024) பதில் அளித்துப் பேசினார்.

பிரதமர் மோடியின் உரையில், இந்தியாவை, 2047ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக்க 24 மணி நேரமும் உழைக்கிறோம். ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையால்தான் நாட்டு மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர்.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க கடுமையாக உழைக்கத் தயார். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை செய்துள்ளது பாஜக. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்தது.

நாடு முழுவதும் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அளிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து செயல்படும் செல்ஃபோன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பொருள்களைப் பெறுவதற்குக் கூட மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் லஞ்சம் மலிந்திருந்தது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிரவாதிகளை, அவர்களது நாட்டுக்கேச் சென்று தாக்கியுள்ளோம்.

தற்போது தீவிரவாதிகளை சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி அழித்து வருகிறம். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் மனதில் நம்பிக்கை பிறந்ததுள்ளது. மூன்றாவது முறை ஆட்சியில் அமர்ந்துள்ளோம். மும்மடங்கு வேகத்துடன் செயல்படுவோம்.

முன்னதாக, உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகக் கூறினார்.

மூன்றாவது முறையாக தேசத்தின் மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

நாங்கள் எப்படி திறம்பட பணியற்றினோம் என்று மக்களுக்குத் தெரியும், தேசத்தின் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள். ஏழைகள் நலனுக்காக நங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாகத் தெரிகிறது. 10 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

மதச்சார்பின்மைக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை ராகுல் காந்தி தூண்டிவிடுகிறார். வாக்கு வங்கி அரசியல் தேசத்தை சீர்குலைத்துவிட்டது. அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்கான வளர்ச்சி என்பதே எங்கள் கொள்கை என்றார் பிரதமர் மோடி.

மோடியை பேச விடாமல் எதிர்க்கட்சிகள் அமளி!

ஆனால், பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் கடும் கூச்சல் எழுப்பினர். இதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், அவைத் தலைவர் இருக்கைக்கு அருகே சென்று கோஷமெழுப்பினர். 

மணிப்பூர், மணிப்பூர் என்று  முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை பேசுமாறு தொடர்ந்து முழங்கினர்.

நன்றி: தினமணி

Comments (0)
Add Comment