கொடநாடு வழக்கும் இண்டர்போல் அமைப்பும்!

வழக்கமாக தமிழ்நாட்டில் நடக்கும் எந்தத் தீவிரமான சம்பவங்களுக்கு சிபிசிஐடி விசாரணைக் கோருவார்கள் அல்லது சிபிஐ விசாரணைக் கோருவார்கள்.

அபூர்வமாக தமிழகத்தில் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சர்வதேச இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து தமிழக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது.

“மிக முக்கிய வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்.

கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும்.

மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்”.

– நன்றி: முரசொலி

cm_stalininvestigation-in-kodanadu-case-with-the-help-of-interpolஇண்டர்_போல்கொடநாடு_வழக்குமுதலமைச்சர்_ஸ்டாலின்
Comments (0)
Add Comment