சபாநாயகரை பதவி விலகச் சொன்ன எடப்பாடி!

தற்போது நடந்து வருகின்ற சட்டசபைத் தொடரில் அதிமுக தொடர்ந்து கள்ளக்குறிச்சி சாராய சாவுகள் குறித்த ஒரு பிரச்சனையைத் தொடர்ந்து எழுப்ப முயன்று வெளிநடப்பு செய்து வருகிறது.

இன்றும் அப்படி வந்த அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து வந்து வெளி நடப்பு செய்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,

“சபாநாயகர் அப்பாவு அவருடைய இருக்கையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசுகிறார். அவருடைய இருக்கையிலிருந்து அரசியல் பேசுவது முறையல்ல. அவருடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்து அவர் அரசியல் பேசட்டும்” என்று வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார்.

இதற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்ன எடப்பாடி பழனிசாமி தற்போது சபாநாயகர் அப்பாவுவை பதவி விலகக் கோரி இருக்கிறார்.

admkepslegislative-assemblyspeaker appavuஎடப்பாடி பழனிசாமிமு.க.ஸ்டாலின்
Comments (0)
Add Comment