எழுத்தாளர் முருகவேளின் முகநூல் பதிவிலிருந்து…
சமீபத்தில் பார்த்த ஃபீல் குட் படம் பிரேமலு. அலட்டிக் கொள்ளாத ஜாலியான படம். ஆனால் சுற்றிலும் இருக்கும் 2k கிட்ஸ் பலரை நினைவுபடுத்தியது.
பெண்கள் பலகாலமாக வேலைக்கு போகிறார்கள் என்றாலும் பண்பாட்டு அடிப்படையில் பெரிய மாற்றம் இல்லை. சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்து அப்பாவிடம் கொடுப்பது அல்லது கணவனிடம் கொடுப்பது என்றுதான் இருந்தது. அல்லது பெண்களின் ஊதியத்தின் மீது குடும்பத்தின் பிடி இருந்தது.
இப்போது ஐடி வேலைகள் வந்து வெளி இடங்களுக்கு போய் தனியாக இருக்க வேண்டி வந்ததும், பணி இடங்களில் மேற்கத்திய பண்பாடு இருப்பதும் பெண்களின் சுதந்திரத்தில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது.
உடைகள் நண்பர்கள் பொழுது போக்கு உணவு எல்லாவற்றிலும் இந்த புதிய சுதந்திரம் தெரிகிறது. அவர்கள் எதிரில் உள்ள ஆண்களோடு பழகித்தான் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்.
ஆனால் பையன்கள் பெரிதாக மாறவில்லை. பெண் சிரித்தால், பார்த்தால், அக்கறையாக ஏதாவது செய்தால் காதல் என்று முடிவு கட்டும் இடத்தில்தான் இருக்கிறார்கள். பழைய பொறாமை, போசசிவ்நெஸ் எல்லாம் அப்படியே இருக்கிறது. எங்க அம்மா அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார்கள் தெரியுமா என்ற சென்டிமென்ட் அப்படியே இன்னும் பையன்களிடம் இருக்கிறது.
பல விவாகரத்து வழக்குகளில் இந்தப் பிரச்சினை இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். படத்தில் ஹீரோயின் கேரக்டர் உருவாக்கம் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது. மமிதா பைஜுவின் நடிப்பும் அட்டகாசம். மாறாக ஹீரோ கேரக்டர் தத்தியாக காட்டப்படுகிறது. அந்த அளவுக்கு இல்லை என்பது எனது புரிதல்.
இந்த மாதிரி ஒரு கதையை அழுகாமல், சென்டிமென்ட் இல்லாமல், மெசேஜ் சொல்கிறேன் என்று குதறி வைக்காமல் லைட்டாக சொன்னதுதான் சிறப்பு.
நன்றி: இரா. முருகவேள்
#எழுத்தாளர்_முருகவேள் #பொறாமை #போசசிவ்நெஸ் #வாழ்க்கைத்_துணை #ஆண் #நண்பர்கள் #விவாகரத்து #மமிதா_பைஜு #பெண் #writer_Murugavel #Jealous #Possessiveness #Spouse #friends #Divorce #Mamita_Baiju #Female #premalu #பிரேமலு