சர்வதேச யோகா தினம்:
ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சர்வதேச யோகா தினத்தின் மையக் கருவாக இருக்கிறது.
உடலையும், மனதை ஒருநிலைப்படுத்த ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள யோகா பயிற்சிகள் உதவுகின்றன.
யோகா என்பது இயற்கையுடன் நம்மை ஒன்றிணைத்து நமது உடலை செயல்பட வைக்கிறது. பொதுவாக யோகப் பயிற்சி என்பது மனதிற்கு உற்சாகத்தை கொடுத்து உடலை வலுவாக்கி, இளமையுடன் துடிப்புடன் செயல்பட வைப்பது.
அத்துடன் மனதை ஒருநிலைப்படுத்தி செய்யப்படுவதால் மன அழுத்தம் குறைக்க படுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி,உடலுக்கு நெகிழ்வு தன்மையை கொடுக்கிறது. செயல்களில் நேர்த்தியும், மன வலிமையை அதிகரிக்க செய்கிறது.
பல நன்மைகளை உள்டைக்கிய யோக பயிற்சியில் மிக முக்கியமான பயிற்சியை பற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.
சூரிய நமஸ்காரம்:
அதிகாலை எழுந்து சூரியனை நோக்கி நமது உடலை வளைத்து நெளித்து ஒட்டுமொத்த உடலையும் இயங்க வைக்கும் பயிற்சியாகும்.
மிக எளிமையாக செய்யக்கூடிய சூரிய நமஸ்காரத்தில் இந்த பயிற்சி மிக எளிமையான முறையில் செய்யக்கூடியது தான். ஆனால் பொறுமையாக செய்ய வேண்டும். அவசரம் காட்டினால் உடலில் தசை பிடிப்பு ஏற்படக்கூடும்.
பிராணமாசனம்:
இந்த பயிற்சியை அதிகாலை அல்லது மாலை பொழுதில் செய்வதற்கு ஏற்ற நேரமாக இருக்கும். முதலில் இரு கைகளையும் குவித்து சாமி கும்பிடுவது போல் இதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் மூச்சை வெளிவிட வேண்டும்.
ஹஸ்தோ தனாசனம்:
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி முதுகையும் இரண்டு கைகளையும் பொறுமையாக பின்புறமாக வளைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் மூச்சை உள்வாங்க வேண்டும்.
ஹஸ்தபாதாசனம்:
இதில் பின்னோக்கி இருக்கும் உடம்பையும் இரண்டு கைகளையும் முன்புறமாக குனிந்து வளைந்து பாதத்தைத் தொட வேண்டும். இந்த நிலையில் முட்டிக் கால்களை வளைக்காமல் இந்த நிலையில் மூச்சுக்காற்றை வெளியிட வேண்டும்.
அஸ்வ சஞ்சலாசனம்
இரு கைகளையும் கால்களுக்கு அருகில் தரையில் வைத்து விட வேண்டும். இடது காலை பின்னோக்கி நீட்டி வலது காலை முன்னோக்கி முட்டி போடும் வகையில் வைத்து தலையை நிமிர்த்தி மேல் நோக்கி பார்க்க வேண்டும்.அப்படியே ஆழமாக மூச்சை உள்வாங்கவும்.
தண்டசனா:
மூச்சை உள்வாங்கியவாறே வலது காலையும் பின்னோக்கி நீட்டி கையை எடுக்காமல் குனிந்த நிலையில் உடலை நேராக வைக்க வேண்டும். மூச்சை சற்று வெளியேற்றிய பிறகு மூச்சை உள்வாங்கவும்.
அஷ்டாங்க நமஸ்காரம்:
இந்த நிலை கோயிலில் கீழே விழுந்து கும்பிடுவது போல் செய்ய வேண்டும்.
நமது உடலில் இருக்கும் 8 அங்கங்களும் தரையில் பட வேண்டும். இந்த நிலையின் போது உள் வாங்கிய மூச்சை வெளிவிட வேண்டும்.
புஜங்காசனம்:
முன் இருக்கும் கைகளை எடுக்காமல், கால்களை நகர்த்தாமல் முதுகு மற்றும் தலையை படம் எடுக்கும் பாம்பை போன்ற நிலையில் வைக்க வேண்டும்.
கைகளும் கால்களும் தரையில் இருக்க, உடம்பும் முகமும் மேல் நோக்கி பார்க்கவும். இந்த நிலையில் மூச்சை உள்வாங்க வேண்டும்.
முக ஸ்வனாசனா:
இந்த நிலையில் நமது உடல் பார்பதற்கு பாலம் போல் இருக்கும். இதில் இடுப்பு பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த முறை மூச்சை வெளியிட வேண்டும்.
அஸ்வ சஞ்சலான:
இதில் நன்றாக மூச்சை உள்வாங்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு முறை செய்யும் போது மூச்சில் கவனத்தை செலுத்தி 3 அல்லது 5 செட் என பிரித்து ஓய்வெடுத்து செய்ய வேண்டும்.
கடைசியாக தடாசனம், கைகளை கீழே இறக்கி விட்டு மூச்சை வெளியிட்டு இயல்பு நிலைக்கு வந்து உடலை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், தசைகளை வலுவாக்கும், உடலில் நெகிழ்வு தன்மையை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்தை குறைக்கும்.
ஆகவே.. இந்த அவசரமாக பயணிக்கும் நாகரிக வாழ்க்கை முறையில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். சர்வதேச யோகா தினமான இன்று நமது உடலில் அக்கறை எடுத்துக் கொள்ள உறுதியேற்போம்.
– யாழினி சோமு