கலைத்துறையில் மாபெரும் புரட்சியாளர் கலைவாணர்!

- தந்தை பெரியார்

கலைவாணர் பற்றி தந்தை பெரியார் கூறியது:

கல்லடியும் சொல்லடியும் பட்டு மூன்று மணிநேரம் தொண்டை கிழியப் பேசியும் எவ்வளவு பேர் என் கருத்தை ஏற்றார்கள் எனத் தெரியாமல் போகிறது.

அதையே என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாவில் சொல்கிறார். மக்கள் காசு கொடுத்துச் சினிமா பார்த்து மகிழ்ச்சியாக இந்தக் கருத்துகளையெல்லாம் நன்கு தெரிந்து கொள்கிறார்கள். நான் நூறு கூட்டங்களுக்குப் போய் செய்யக் கூடியதை என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தின் மூலம் சாதித்து விடுகிறார்.

இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் நாடகத்துறையிலும், கலைத்துறையிலும், இசைத் துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தி இருக்கிறார்.

கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி ‘அன்னக் காவடி கிருஷ்ணன்’ ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே பயனற்றதாக ஆகிவிடும்!

வாழ்க கலைவாணர்.

– தந்தை பெரியார் (‘குடிஅரசு’ 11.11.1944)

#thanthai_periyar #periyar #தந்தை_பெரியார் #பெரியார் #என்_எஸ்_கிருஷ்ணன் #என்_எஸ்_கே #கலைவாணர் #லெனின் #lenin #nsk #n_s_krishnan #kalaivanar 

periyarthanthai periyarஎன்.எஸ். கேஎன்.எஸ்.கிருஷ்ணன்கலைவாணர்தந்தை பெரியார்
Comments (0)
Add Comment