ஸ்டார்ஷிப் – பேரார்வத்தைப் பகிர்ந்த எலான் மஸ்க்!

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நிலவிற்கும், செவ்வாய் கோளிற்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஒன்றை உருவாக்கி, அதை செயல்படுத்தும் முயற்சியில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ராக்கெட், 33 என்ஜின்களுடன் 400 அடி உயரத்தில், உலகின் மிகப்பெரிய ராக்கெட் என்ற சிறப்பம்சத்துடன் தயாரானது.

இந்த ராக்கெட்டின் முதற்கட்ட சோதனை கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நிலையில், ராக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் ராக்கெட் செயல்படாததால் ஏவப்பட்ட 4 நிமிடங்களிலே வெடித்துச் சிதறியது.

பின்பு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது சோதனை முயற்சி நடத்தப்பட்டது. அப்போது, ராக்கெட்டிலிருந்து விண்கலம் தனியாகப் பிரிந்த பிறகு பூஸ்டர் வெடித்துச் சிதறியது.

மூன்றாவது சோதனை முயற்சி, விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பறப்பதற்கு தயாராக உள்ள ஸ்டார்ஷிப்பின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், அந்த ஷிப் பறப்பதைப் பார்க்க பேராவலோடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Elon MuskSpaceXStarshipஎலான் மஸ்க்ஸ்டார்ஷிப்ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனம்
Comments (0)
Add Comment