அறிதலைக் கடந்து, உணர்தலை நோக்கி நகர்வதே ஞானம்!

ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் புரூஸ் லீ-ஐ வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான்.

லீ அமைதியாகவே இருந்தார்.

“ஏன் இப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு புரூஸ் லீ, ”நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன்!” என்று சொன்னார்.

வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது” என்றாராம்.

நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு.

கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து “வெறுமையாக இருக்கிற பொழுது தான், அறிதலைக் கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய்!” என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக் கதை மிகவும் பிடிக்குமாம்.

மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் மிக முக்கியம் என்பாராம் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக் காட்சிகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.

– நன்றி: முகநூல் பதிவு

bruce lee
Comments (0)
Add Comment