நான் சிறுவனாக, இலக்கியம் நூல்கள் குறித்தெல்லாம் புரிதல் இல்லாமலிருந்த காலத்திலேயே ஜெயகாந்தன் என்ற பெயர் எனக்கு அம்மாவின் வழியாக அறிமுகமானது.
படித்தக் குடும்பத்தில் இருந்து வந்ததால் அம்மாவுக்கு ஊரில் மதிப்பு அதிகம். குழந்தைகளுக்கு பெயர் வைக்கச் சொல்லி அம்மாவிடம் கொண்டுவருவார்கள்.
அப்படி ஒருமுறை அம்மா, ஒரு குழந்தைக்கு ஜெயகாந்தன் என்று பெயர் வைத்தார். ஊர் மக்களால் அப்பெயரை தெளிவாக உச்சரிக்க முடியவில்லை.
ஆனாலும் அப்பெயர் மயங்கொலி மற்றும் திரிபுகளுடன் ஊரில் நிலைத்தது!
எழுத்து, கருத்து, பெயர் என்ற மூன்று வகையிலும் தலைமுறைகளிடம் சென்று சேர்ந்தவர் ஜெயகாந்தன்.
நன்றி: முகநூல் பதிவு