கிடைத்ததும் கிடைக்காததும்…!

வாசிப்பின் ருசி: உலகக் கவிதை வரிசை!

“நாம் குறை சொல்ல முடியாது.
நாம் வேலையில் இல்லாமல் இல்லை.
நாம் பசியோடு இல்லை.
நாம் சாப்பிடுகிறோம்.
புல் வளர்கிறது.
சமூகம் உற்பத்தி செய்தவை வளர்கின்றன.
விரல் நகங்கள் வளர்கின்றன.
கடந்த காலம் வளர்கிறது.
சாலைகள் காலியாக உள்ளன.
பேரங்கள் பேசி முடிக்கப்பட்டு விட்டன.
அபாயச் சங்குகள் மௌனமாகிவிட்டன.
எல்லாமும் கடந்து போய்விடும்.
செத்துப்போனவர்கள்
உயில்களை எழுதிவைத்து விட்டார்கள்.
மழை தூறலாகிவிட்டது.
போர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
அதற்கு அவசரமும் இல்லை.
நாம் புல்லைத் தின்கிறோம்.
நாம் சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்டவற்றைத்
தின்கிறோம்.
நாம் கை நகங்களைத் தின்கிறோம்.
நாம் கடந்த காலத்தைத் தின்கிறோம்.
கடிகாரம் நிறுத்தப்பட்டுவிட்டது.
விலைகள் கொடுக்கப்பட்டுவிட்டன.
கழுவி விடுதல் நடந்துவிட்டது.
கடைசிப் பேருந்து போய்க் கொண்டிருக்கிறது.
அது காலியாக இருக்கிறது.
நாம் குறை சொல்ல முடியாது
நாம் எதற்காக வாழ்கிறோம்?”

– ஹேன்ஸ் மேக்னஸ் என்சென்ஸ்பெர்கர் (Hans magnus Enzensberger) என்பவரின் ஜெர்மன் கவிதை.

– தமிழில் மொழிபெயர்த்தவர் இந்திரன்.

Hans magnus Enzensbergerஉலகக் கவிதைஜெர்மன் கவிதைஹேன்ஸ் மேக்னஸ் என்சென்ஸ்பெர்கர்
Comments (0)
Add Comment