படித்ததில் ரசித்தவை:
பால் கொஞ்சம் தன் நிலையில் இருந்து மாறினால் தயிராகும். பாலை விட தயிருக்கு மதிப்பு அதிகம். தயிரை கடைந்தெடுத்தால், அது வெண்ணையாக மாறும்.
தயிர் மற்றும் பால் இரண்டையும் விட வெண்ணை மிகவும் மதிப்பு வாய்ந்தது. வெண்ணெயை உருக்கினால், சூடுபடுத்தினால் நெய்யாகிறது. எல்லாவற்றையும் விட நெய்க்கு மதிப்பு மிக அதிகம்.
சாதாரணமாக இருந்த பாலின் நீண்ட போராட்டமும், சவால்களும், அழுத்தமும் அதை மதிப்புமிக்க நெய்யாக மாற்றுகிறது.
திராட்சை ஜூஸ் கம்மி விலைதான். ஆனால் திராட்சை ஜூஸ் புளிப்பாக மாறினால், அது திராட்சை ஜூஸை விட அதிக விலை கொண்ட ஒயினாக மாறுகிறது.
நீங்கள் தவறு செய்ததால் நீங்கள் மோசமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. தவறுகள் உங்களை மிகவும் மதிப்புமிக்க மனிதனாக மாற்றும் அனுபவங்கள்.
கொலம்பஸ் ஒரு பயண பிழையை செய்தார், அதாவது வழி தவறினார். ஆனால் அது அவரை அமெரிக்காவைக் கண்டுபிடிக்கச் செய்தது. அலெக்சாண்டர் ஃப்ளெமிங்கின் தவறு அவரை பென்சிலின் கண்டுபிடிக்க வழிவகுத்தது.
உங்கள் தவறுகள் உங்களை வீழ்த்த மட்டும் விடாதீர்கள். அந்த தவறுகள் உங்களை செம்மைப்படுத்தும். எந்தத் திசை, எந்தத் திட்டம், எந்த செயல்முறை என்பதை உங்கள் தவறுகள் உங்களுக்கு அடையாளம் காட்டும்.
தவறுகளில் இருந்து என்ன நாம் கற்கிறோமோ அதுவே சரியானவை.