பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் பற்றி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த தலையங்கம்:
தேர்தல் பிரச்சாரத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம், விலைவாசி, வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி ஏதும் பேசவில்லை.
பாஜகவின் பத்தாண்டு கால சாதனைகளை குறித்து பேச பிரதமர் மோடி மறுக்கிறார்.
பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசுவதையும், கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதையும் இஸ்லாமியர் துவேஷத்தையும் மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறார்.
வடக்கையும் தெற்கையும் பிரித்து பேசும் விஷமச் செயலை பிரதமர் செய்யக் கூடாது.
வாக்காளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளை குறித்து பேசாமல், இத்தகைய பிரிவினை அரசியலை மோடி செய்வது, இந்திய நாட்டுக்கு நல்லது கிடையாது.
நன்றி: தி ஹிண்டு தலையங்கம்-18.05.2024